044 - 2622 2360 (Chennai)

0424 – 222 6909 (Erode)

sathyaiasacademy@gmail.com

      Important News- TNPSC Group IV-Vacancy

      தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையர் , வரைவாளர், தட்டச்சர்போன்ற 6000 க்கும் மேற்பட்ட  பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 01.09.2019 அன்று நடைபெறவுள்ளது.இந்த தேர்வில் பங்குபெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. மெயின் மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாதகாரணத்தால் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப்பணி நிச்சயம். இந்த தேர்வில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் தங்களது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அரசுப்பணி பெற வழிகாட்டும் வகையில் வார விடுமுறைநாட்கள் பயிற்சி வகுப்புகளை சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி துவங்குகிறது. அதற்கானசேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.  இது குறித்து சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் சத்யா மேலும் கூறியதாவது.

      “தற்போதைய நிலவரப்படி குரூப் 4 ல் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 6000. ஆனால் சுமார் 180 துறை தலைமைகள் இன்னும் காலிப்பணியிட விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்காததால் கலந்தாய்வின்போது  காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 8000 த்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.